தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் |
தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய புகழ்பெற்றவர் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே யேசுதாஸ். அவரது மகன் விஜய் யேசுதாஸ் தந்தையை போலவே பின்னணி பாடகராக மாறி தற்போது பிஸியான பாடகராக வலம் வருகிறார். அது மட்டுமல்ல இன்னொரு பக்கம் நடிப்பு மீதான ஆர்வத்தால் சில படங்களில் கதாநாயகனாக, வில்லனாக நடித்துள்ளார் விஜய் யேசுதாஸ்.
கடந்த 2007ல் தர்ஷனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஜய் யேசுதாஸ். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2016ல் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பின்னர் விவாகரத்து பெற்று விட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தனது விவாகரத்து குறித்தும் அதற்கு பிறகான வாழ்க்கை குறித்தும் சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார் விஜய் யேசுதாஸ்.
அவர் கூறும்போது, “எங்களது பிரிவு மூலமாக நான் பாதிப்புக்கு ஆளானதை விட எனது குடும்பத்தினர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னைப் பொறுத்தவரை நான் பாதிக்கப்பட்டவன் என்பதை விட அதிகம் பொறுப்புள்ளவனாக மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனது குழந்தைகளிடம் எப்போதும் சந்தோஷத்தை தக்க வைக்கும் விதமாகவே என்னுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொண்டேன். குழந்தைகள் என்னுடன் இருக்கிறார்களா, தனது தாயுடன் இருக்கிறார்களா என்கிற விவரம் எதுவும் வெளியில் நான் சொல்ல தேவையில்லை. அவர்களுக்கு எங்கே சந்தோசமாக இருக்கிறதோ அங்கே இருக்கிறார்கள். விவாகரத்து பற்றிய அந்த சோகத்திலேயே இருக்கிறேனா என்றால் நிச்சயமாக அதற்கெல்லாம் எனக்கு நேரமே இல்லை.. வேலைகளில் பிஸியாக கவனம் செலுத்தி வருகிறேன்” என்றார்.