'வாரணாசி' படப்பிடிப்பை ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி! | 'வித் லவ்' ஹீரோவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா | குடியிருந்த கோயில், அண்ணாமலை, சிங்கம் 3 - ஞாயிறு திரைப்படங்கள் | காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை |

சமீபகாலமாக சோசியல் மீடியாவின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் பல நடிகைகளும் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக சோசியல் மீடியாவில் தங்களைப் பற்றிய பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும் பல எதிர்மறை எண்ணம் கொண்ட நெட்டிசன்கள் இவர்களது பதிவை உள்நோக்கத்துடன் விமர்சிப்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பதிலுக்கு இவர்களுடன் எந்த ஒரு நடிகையும் சரிக்கு சரி பதில் கொடுத்து மோதலில் ஈடுபடுவது இல்லை.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அனேகன் படத்தில் கதாநாயகியாக நடித்த பாலிவுட் நடிகை அமைரா தஸ்தூர் இது போன்ற டிரோல்களை நிறைய சந்தித்தார். ஆனால் அதை எதிர்கொள்வதற்காக, பதிலடி தருவதற்காக இவர் புத்திசாலித்தனமாக சில மாற்று வழிகளை கையாண்டதாக சமீபத்தில் கூறியுள்ளார்.
அதாவது யாருக்கும் தெரியாமல் சில போலி கணக்குகளை சோசியல் மீடியாவில் உருவாக்கி அதன்மூலம் தன்னுடைய பதிவுகளில் முறையற்ற வகையில் விமர்சனம் செய்பவர்களுக்கு வேறு பெயரில் பதிலடி கொடுக்க துவங்கினாராம். ஆனால் இப்படி நான் செய்வது இதுவரை யாருக்குமே தெரியாது. ட்ரோல் செய்பவர்கள் செய்து கொண்டே போகட்டும் என அப்படியே விட்டுவிட முடியாது. அவர்கள் எல்லை மீறும்போது ஒரு கட்டத்தில் நாமும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டியதாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அமைரா தஸ்தூர்.