ரஜினி என்ற ஒரு பெயருக்காகதான் நடிக்கிறேன் : கன்னட நடிகர் உபேந்திரா | வெற்றி தீபம்... ஜனநாயகத்தின் ஒளி... : அரசியல் படமா... ‛விஜய் 69' | திருமண சடங்கான மெஹந்தி புகைப்படங்களை வெளியிட்ட மேகா ஆகாஷ் | ‛வேட்டையன்' படம் பற்றி மஞ்சு வாரியர் என்ன சொல்கிறார் | அரசியல் பேசும் சசிக்குமாரின் நந்தன் : டிரைலர் வெளியானது | மீண்டும் ஜோடி சேரும் விஜய், பூஜா ஹெக்டே | என் தந்தையே எனது மிகப்பெரிய விமர்சகர் : பாடகி டூ நடிகை த்வானி பனுஷாலி பேட்டி | ஸ்பெயின் பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு | மீண்டும் தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரண் | பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி |
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா வருகிற 17ம் தேதி முதல் முதல் 20ம் தேதி வரை பிரான்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கிறது. இதில் 140 நாடுகளிலிருந்து திரைப்பட கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவில் 'லெட்ஸ் ஸ்பூக் கேன்ஸ்' என்ற பிரிவில் திரையிட ஒரு தமிழ் படைப்பு தேர்வாகி இருக்கிறது. மன்மார் கேம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தியாவின் முதல் 'லைவ் ஆக்ஷன் கேம்' திரைப்படமான 'இருவம்' தேர்வாகி உள்ளது. இதனை ஒரு திரைப்படமாகவும் பார்க்கலாம், வீடியோ கேமாகவும் விளையாடலாம், படத்தின் கிளைமாக்சை ஆடியன்சே தீர்மானிக்கலாம் அல்லது மாற்றி அமைக்கலாம் என்பதே இந்த படத்தின் சிறப்பு. இது திரைப்படம் மற்றும் அனிமேஷன் கேமின் அடுத்த கட்டம் என்கிறார்கள். இந்த படம் முதல்கட்டமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “முதலில் மவுனப்படங்கள் பின் கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணப்படம், 3டி, மோஷன் கேப்சரிங் என மாறி வந்து இன்று 21ம் நூற்றாண்டில் கதை சொல்லலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த கேன்ஸ் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் 'இருவம்' தேர்வாகி சாதனை புரிந்துள்ளது.
'கெட் ஹேப்பி' என்ற ஆங்கிலத் திரைப்படத்தை இயக்கிய மனோஜ் அண்ணாதுரையின் இயக்கத்தில் 'இருவம்' சினிமா மற்றும் வீடியோ கேம் ஆகிய இருபெரும் துறையை இணைத்து, எளிய மக்களும் பயன்படுத்தும் செல்போன் குறுந்திரையில் வெளியாக இருக்கிறது. இதில் நடிகை வர்ஷா பொல்லம்மா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அர்ஜுன் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்க, திமோதி மதுகர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் படைப்பாளிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு திட்டமாகும். இது ஒரு புதுவிதமான கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியத் திரைப்படத் துறையில் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.