தாயைக் காத்த தனயன், உரியடி, பைரவா - ஞாயிறு திரைப்படங்கள் | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 |
மலையாளத்தில் நடிகர் நிவின்பாலி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ‛மலையாளி பிரம் இந்தியா' என்கிற படம் வெளியானது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‛ஜன கன மன' படத்தை இயக்கிய டிஜே ஜோஸ் ஆண்டனி இந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் படங்களை தயாரித்து வரும் லிஸ்டின் ஸ்டீபன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முதல் நாள், பிரபல கதாசிரியரும் ஆர்டினரி என்கிற சூப்பர் ஹிட் படத்திற்கு கதை எழுதியவருமான நிஷாத் கோயா என்பவர் இந்த படத்தின் திரைக்கதை, கடந்த 2021ல் டைரக்டர் ஜோஷி இயக்குவதற்காக தான் எழுதிய படத்திற்கான திரைக்கதை போலவே இருக்கிறது என்று கூறி அதற்கான கதைச் சுருக்கத்தையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டார். இது படத்தின் தயாரிப்பாளர் லிஸ்டின்ஸ் ஸ்டீபனின் கவனத்திற்கு சென்றது.
உடனே நிஷாத் கோயாவை தொடர்பு கொண்டு, “நீங்கள் செய்வது நியாயம் இல்லை.. உங்கள் படத்தின் கதை என நீங்கள் நினைத்திருந்தால் நான் படம் ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் ஆகி உள்ளது. நானும் சந்திக்கும் அளவிற்கு எளிதாக தான் இருந்தேன். அப்போதே என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். படம் வெளியாவதற்கு முதல் நாள் இதுபோன்று செய்வது திரை உலகில் இருக்கும் உங்களைப் போன்ற மூத்தவர்களுக்கு அழகு இல்லை.. நீங்கள் வெளியிட்டுள்ள பதிவை தயவு செய்து நீக்குங்கள்” என்று கூறியதும் உடனடியாக தனது பதிவை நீக்கிவிட்டார் நிஷாத் கோயா.