இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் | கதை திருடும் சினிமா இயக்குனர்கள்: எழுத்தாளர் ஆர்னிகா நாசர் ஆவேசம் | காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! |
ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி வரும் இதில் பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு பல்வேறு கட்டமாக பல இடங்களில் நடைபெற்று வந்தது. அதேசமயம் ரஜினிகாந்தின் 171வது படமான கூலி குறித்து புதுப்புது அப்டேட்டுகள் வெளியானாலும் வேட்டையன் குறித்த தகவல்கள் எதுவும் பெரிய அளவில் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நூறாவது நாளை தொட்டுள்ளது. இது குறித்த தகவல் ஒன்றை படக்குழுவினர் சிலர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளனர். சமீப காலமாக சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகப்பெரிய அரங்கு ஒன்றில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினியின் அறிமுக பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது.