போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
அந்நியனைத் தொடர்ந்து மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ஐ. இந்த படத்தின் முதல் கட்டபடப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் ஒரு பருமனான மற்றும் உடல் மெலிந்த என இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் விக்ரம். அதாவது அந்நியனில் அம்பி, அந்நியன் என இரண்டுவிதமாக நடித்தது போன்று இந்த படத்திலும் தோன்றுகிறாராம்.
அதனால் முதலில் உடல் பருமனான விக்ரம் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்கிவிட்ட ஷங்கர், இப்போது உடல் மெலிந்த விக்ரம் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்க களமிறங்கியிருக்கிறார். ஆனால், ஏற்கனவே விக்ரம் 8 கிலோ உடல் எடையை குறைத்து வந்தபோதும், அது போதுமானதாக இல்லையாம். அதனால் இன்னும் 5 கிலோ குறைக்க வேண்டும் என்றாராம். ஆனால், இன்னும் 5 கிலோ குறைக்க வேண்டுமென்றால் நாட்கள் அதிகமாக பிடிக்குமே என்று யோசித்த விக்ரம். இப்போது சீனா சென்றுள்ளார். அங்குள்ள சில அதிநவீன கருவிகள் மூலம் அவரது உடல் எடையை குறைக்கிறார்களாம். அதனால் விக்ரம் வரும் வரைக்கும் ஐ படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.