Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்?

25 ஏப், 2024 - 10:42 IST
எழுத்தின் அளவு:
Who-benefits-from-re-release-films?

ரீ-ரிலீஸ் என்பது எப்போதோ ஒரு முறை நடந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜி கணேசன் நடித்த 'கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், வசந்த மாளிகை' எம்ஜிஆர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வசூலைக் கொடுத்தன. அதன்பின் ரஜினி நடித்த 'பாட்ஷா, பாபா' ஆகிய படங்களும், கமல்ஹாசன் நடித்த 'வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான்' ஆகிய படங்களும் ரீ-ரிலீஸ் ஆகின.

அது அப்படியே தொடர்ந்து கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து சில பல படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வசூலைக் கொடுக்க ஆரம்பித்தன. கடந்த சில மாதங்களில் மட்டும், “விண்ணைத் தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், 3, விஐபி, மயக்கம் என்ன, யாரடி நீ மோகினி, பையா, கில்லி” உள்ளிட்ட படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின. அடுத்து அஜித் நடித்துள்ள 'பில்லா' படமும் மே 1ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படி ரீ-ரிலீஸ் ஆகும் படங்களால் அப்படங்களைத் தயாரித்தவர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் அதிக லாபம் இல்லையாம். படத்தைத் திரையிடும் தியேட்டர்காரர்களுக்கே அதிக லாபம் வருகிறது என்கிறார்கள். முதல்வாரத்திற்கு தியேட்டர்காரர்களுக்கு 70 சதவீதம், வினியோகஸ்தர்களுக்கு 30 சதவீதம், இரண்டாவது வாரத்திற்கு தியேட்டர்காரர்களுக்கு 80 சதவீதம், வினியோகஸ்தர்களுக்கு 20 சதவீதம் என்ற முறையில்தான் திரையிடப்படுகிறதாம்.

தியேட்டர்காரர்களோடு சேர்த்து யு டியூப் சேனல் வைத்துள்ளவர்களும் நல்ல வருவாயைப் பார்க்கிறார்கள். 'கில்லி' படத்திற்காக இயக்குனர் தரணி, தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம், ஒளிப்பதிவாளர் கோபிநாத் என பலரது பேட்டிகள் யு-டியுப் சானல்களால் எடுக்கப்பட்டு அதன் மூலம் அவர்களுக்கும் ஒரு வருவாய் கிடைக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம்விஜய் கையில் காயம் : ரசிகர்கள் ... நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
30 ஏப், 2024 - 09:04 Report Abuse
Anbuselvan யாருக்கு லாபமோ இல்லையோ மக்களுக்கும் தியேட்டர் உரிமையாளருக்கும் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும்தான் நஷ்டம். இந்த திரைப்படங்கள் அனைத்தும் பல்வேறு தொலைக்காட்சிகளில் அடிக்கடி போடப் படுகிறது. எனக்கு தெரிந்து கில்லி திரைப்படம் ஒரே தொலைக்காட்சி சேனலில் இது வரை பத்து தடவை போட்டு விட்டார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in