'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று(ஏப்., 23) கோலாகலமாய் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர். அழகர் ஆற்றில் இறங்கிய வைபவத்தை அருகில் இருந்து பார்த்தது பற்றி நடிகர் சூரி நெகிழ்ச்சி உடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‛‛அரை டவுசர் வயதில் அப்பாவின் தோள் மீது உட்கார்ந்து முதன்முதலில் அழகரை பார்த்தேன். "இவர்தான்டா அழகர்... நல்லா பாரு என்றார் அப்பா... மறக்க முடியாத நாள் அது... அதுக்கப்புறம் இப்போது தான் இவ்வளவு அருகில் அழகரை பார்க்கிறேன், பேரானந்தம். நம்ம கள்ளழகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.




