நடிகைகளுக்கு சிபாரிசு: எஸ்கேப் ஆகும் உச்ச நடிகர் | பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி | முதல்வராக பொறுப்பேற்ற விஜய்; விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள் | ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வரும் வரிசையில் சமீபத்தில் நடிகர் விஜய்யும் இணைந்து தனது அரசியல் கட்சியின் பெயரையும் அறிவித்துவிட்டார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தையும் அதன் பிறகு இன்னொரு படத்தையும் முடித்துவிட்டு 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க போவதாக அறிவித்தும் விட்டார். அவரது அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்கிற யூகங்கள் பலவாறாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
இன்னொரு பக்கம் நடிகர் விஷாலும் வரும் 2026ல் தானும் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் விஜய் அரசியலில் இறங்கியதால் தான் நீங்களும் அரசியலில் இறங்குகிறீர்களா என்று அவரிடம் சமீபத்தில் ரத்னம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த விஷால், “அப்படி இல்லை.. விஜய்யை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என நான் கனவு கண்டு கொண்டிருந்தேன். அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அரசியலுக்கு வர இருப்பதால் என்னுடைய கனவு நிறைவேறாமல் போகிறதே என்கிற வருத்தம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.