சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

சமீபத்தில் விஜய் ஆண்டனி நடித்து 'மார்கன்' என்ற படம் வெளியாகி ஓரளவு பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து 'சக்தி திருமகன்' என்கிற அவர் நடித்த படம் ரிலீஸூக்கு தயாராக உள்ளது. அருவி, வாழ் போன்ற படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார். இது விஜய் ஆண்டனியின் 25வது படமாக உருவாகியுள்ளது. இதில் வாகை சந்திரசேகர், சுனில், செல் முருகன், பிரியா ஜித்து உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்துள்ளார்.
தலைமை செயலகத்துக்குள் டீ விற்கச் செல்லும் ஒரு சிறுவன், அங்கு நடக்கும் சீக்ரெட்டை தெரிந்து கொண்டு, தான் பெரியவன் ஆனதும் 6000 கோடிக்கு மேல் மோசடி செய்யும் ஒரு செயலில் எவ்வாறு ஈடுபடுகிறான்? அதையடுத்து என்ன நடக்கிறது என்பதே இந்த படத்தின் கதை களமாக அமைந்துள்ளது.
தற்போது இப்படம் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். ஏற்கனவே இதே தேதியில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மதராஸி' படமும் வெளியாகிறது என அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.