தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தேர்தல் நாள் என்பதால் ரஷ்யாவில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து சென்னை வந்துள்ளார் விஜய். சென்னை வந்தவுடனே முதல் வேலையாக நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் பள்ளியில் அவர் ஓட்டளித்தார். விஜய் ஓட்டுச்சாவடிக்கு வந்தபோது ரசிகர்கள் கூட்டம் படையெடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி விஜய்யை ஓட்டளிக்க அழைத்து சென்றார்கள். அப்போது விஜய்யின் கையில் காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது குறித்து விஜய் வட்டாரத்தில் விசாரித்தபோது ரஷ்யாவில் நடைபெற்று வரும் கோட் படப்பிடிப்பில் பைக் சேசிங் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும், அப்போது விஜய்யின் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டதாகவும் விஜய் தரப்பில் தெரிவித்தார்கள்.
ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள்
தமிழக வெற்றிக் கழகம் தலைவராக விஜய் வெளியிட்ட பதிவில், ‛‛நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.