அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இரண்டு ஆண்டு இடைவேளைக்குப்பிறகு வடிவேலு நடிக்கும் புதிய படம் தெனாலிராமன். இப்படத்தை போட்டாபோட்டி டைரக்டர் யுவராஜ் இயக்குகிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறார். இம்சை அரசன் 23-ம் புலிகேசி போன்று இப்படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு. அதனால், தனது உடம்பிலும், முகத்திலும் எந்த முதிர்ச்சியும் தென்படக்கூடாது என்பதற்காக இப்போது டயட்ஸை கடைபிடித்து உடம்பையும் பராமரித்து வருகிறார்.
இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக ஒரு பிரபல நடிகையைத்தான் நடிக்க வைப்பது என்பதில் உறுதியாக இருந்தார் இயக்குனர் யுவராஜ். அப்படி அவர் பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் இப்போது அஜீத்துடன் பில்லா-2 படத்தில் நடித்த பார்வதி ஓமணக்குட்டன் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தும் இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. அதேசமயம் இன்னொரு ஹீரோயினி தேடும் படலமும் தொடங்கியுள்ளது.