'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இயக்குனர் சிவா நடிப்பில் கங்குவா என்கிற வரலாற்று பிக்ஷன் படத்தில் நீண்ட நாட்களாக நடித்து வந்த சூர்யா, அந்த படத்தின் வேலைகளை முடித்து விட்டார். அதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், இன்னொரு பக்கம் சுதா கொங்கராவின் டைரக்ஷனில் புதிய படம் என அடுத்தடுத்து வரிசை கட்டினாலும் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி ஆச்சர்யம் அளித்தார் சூர்யா.
வெற்றிமாறன் விடுதலை படத்தின் வேலைகளை முடித்துவிட்டு வர தாமதமாகும் என்பதாலும் சுதா கொங்கராவின் படத்தை துவங்குவதற்கு சில விஷயங்கள் தடையாக இருப்பதாலும் உடனடியாக கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்கும் முடிவை எடுத்துள்ளாராம் சூர்யா. இந்த படத்தில் நடிப்பதற்காக தற்போது குதிரையேற்ற பயிற்சி பெற்று வருகிறார் சூர்யா. குதிரை பயிற்சியாளருடன் சூர்யா இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த மாதம் தேர்தல் முடிவடைந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.