'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா |
சித்தார்த்தும், அதிதி ராவும் கடந்த பல மாதங்களாக ஒன்றாக பல விழாக்களில் கலந்து கொண்டார்கள், ஜோடியாக திரிந்தார்கள். இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் கூறப்பட்டது. தங்கள் காதலை மறைமுகமாக உணர்த்தி வந்தார்கள். சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. திருமணம் எப்போது என ரசிகர்கள் அவரை தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருமணம் குறித்து சித்தார்த் கூறியிருப்பதாவது: ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம் என்று நிறைய பேர் பேசுகிறார்கள். சீக்ரெட், பிரைவேட் என்ற வார்த்தைகளுக்கு இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. எங்களது நிச்சயதார்த்தம் ரகசியமாக நடக்கவில்லை. எங்களது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்த தனிப்பட்ட நிகழ்வு அது. திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். உடனே முடிவு செய்ய இது பட ரிலீஸ் கிடையாது. திருமண தேதியை பெரியவர்கள் முடிவு செய்வார்கள் என்கிறார் சித்தார்த்.