பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் | 'விடாமுயற்சி' படத்தால் ரிலீஸ் இடைவெளி | எங்கள் ஆவணங்கள் சரியானவையே - தயாரிப்பாளர் தில் ராஜு | கல்யாணம் குறித்து கேள்வி : ஸ்ருதிஹாசன் டென்ஷன் | தர்ஷனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் உத்தரவு | பிளாஷ்பேக் : ஏவிஎம் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி |
பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் படம் 'வணங்கான்'. இதனை பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் ரோசினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது வணங்கான் பட இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அருண்விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோ உடன் பகிர்ந்துள்ளார்.