பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
கடந்த 2015ல் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் 'இன்று நேற்று நாளை' இதில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் வெளிவந்த மிக முக்கியமான டைம் டிராவல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக இன்று நேற்று நாளை 2ம் பாகம் உருவாகிறது என தகவல் பரவி வந்தது. இப்போது இன்று நேற்று நாளை 2ம் பாகம் உருவாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால், இந்த பாகத்தை ரவிக்குமார் இயக்கவில்லை அவரின் கதையை பரத் மோகன் இயக்குகிறார். சிவி குமாரிடம் 'மாயவன்' திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இவர், 'இக்லூ' மற்றும் 'இப்படிக்கு காதல்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், இந்த பாகத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கவில்லை. விரைவில் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில் உருவாகவுள்ள 'இன்று நேற்று நாளை 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.