'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். சுருக்கமாக ‛தி கோட்' என அழைக்கின்றனர். சமீபத்தில் தான் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் விஜய். கூடுதலாக தனது அடுத்த படமே கடைசி படமாக நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். தற்போது தி கோட் படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களில் அட்லி, வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டன. தற்போது வினோத் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகிறது என்கிறார்கள்.
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி அறிவித்து, படப்பிடிப்பை தொடங்கி விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகளை 2024 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். 2025ம் ஆண்டில் இப்படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.