விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

நடிகர் ஸ்ரீகுமார் தான் நடிக்கும் சீரியல்களில் மிகவும் டெடிகேஷனுடன் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளுக்காக அதிக ரிஸ்க் எடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தற்போது தன்னுடன் நடிக்கும் சக நடிகையையும் ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சியில் நடிக்க வைத்துள்ளார். வானத்தைப் போல சீரியலில் ஸ்ரீகுமார், சாந்தினி இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். அந்த சீரியலின் ஒரு காட்சியில் சாந்தினியும், ஸ்ரீகுமாரும் பைக்கிலிருந்து கீழே விழுவது போல் படமாக்கப்பட்டுள்ளது. அதற்காக இருவரும் உண்மையாகவே பைக்கிலிருந்து கீழே விழுந்து ஸ்டன்ட் செய்துள்ளனர். அந்த ரிஸ்க்கான ஸ்டண்டை ஸ்ரீகுமார் தனது இண்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.