'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
'விக்ரம்' படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் வேறு ஒரு தளத்திற்குச் சென்றுவிட்டார் கமல்ஹாசன். தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து முடித்துவிட்டு 'தக் லைப்' படத்தில் நடிக்க உள்ளார். இடையில் 'கல்கி 2898 ஏடி' படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது அடுத்தடுத்த படங்கள் பற்றிய அப்டேட்களைக் கொடுத்துள்ளார். அதில் 'இந்தியன் 3' படத்தையும் முடித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். 'இந்தியன் 2' படத்திற்கான பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது, அதன்பின் 'இந்தியன் 3' பின் தயாரிப்புப் பணிகள் ஆரம்பமாகும் என்றும் கூறியிருக்கிறார். இதன் மூலம் 'இந்தியன் 3' படம் பற்றி உறுதியாகி உள்ளது.
தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்தான் கமல்ஹாசன் மீண்டும் 'தக் லைப்' படத்தில் நடிக்க உள்ளாராம். அப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்புதான் அன்பறிவ் இயக்க உள்ள படத்தில் நடிப்பார் என்கிறார்கள். அதனால், அடுத்தடுத்து கமல்ஹாசன் நடிப்பில் ஐந்து படங்கள் வெளியாகப் போகிறது.