குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
இன்றைய தலைமுறையினருக்கு ரீ-ரிலீஸ் என்றால் எப்படி இருக்கும் என்பதை சில படங்கள் புரிய வைத்துள்ளன. ஒரு காலத்தில் அன்றைய ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சில படங்கள் சில பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெளியாகி சில வாரங்கள் ஓடும்.
அப்படி ரீ-ரிலீசில் சாதனை புரிந்த படம் என்றால் எம்ஜிஆர் இயக்கி, நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தைத்தான் சொல்ல வேண்டும். 1973ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் அன்றைய கால கட்டத்தில் பல தடைகளைக் கடந்து வெளிவந்து சூப்பர் ஹிட்டாகின. அதன்பின் குறிப்பிட்ட இடைவெளியில் 'புத்தம் புதிய காப்பி, பாலியஸ்டர் பிரின்ட்' என்றெல்லாம் தரம் உயர்த்தி படத்தை ரீ-ரிலீஸ் செய்து வசூல் செய்வார்கள். டிஜிட்டல் வெளியீடு வரையிலும் சமீபத்தில் கூட இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
அந்த விதத்தில் சிவாஜிகணேசன் நடித்த சில படங்கள் மீண்டும் டிஜிட்டலில் வெளியாகி சாதனை புரிந்தது. 'கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், வசந்த மாளிகை' ஆகிய படங்கள் கடந்த சில வருடங்களில் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலையும் அள்ளியது.
'வசந்த மாளிகை' படம் சமீபத்தில் மீண்டும் சில பல தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. சில தியேட்டர்களில் புதிய படங்களைக் காட்டிலும் நன்றாகவே வசூல் செய்தது. சென்னையில் உள்ள ஆல்பட் தியேட்டரில் இந்தப் படம் 6 வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல அதே தியேட்டரில் 6வது முறையாகவும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
அதற்காக சிவாஜி ரசிகர்கள் அத்தியேட்டரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். 50 ஆண்டுகள் கடந்தும் ரீ-ரிலீஸில் ஓடியதை முன்னிட்டு சிவாஜி கணேசன் பற்றிய புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.