ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் கடைசி ஐந்து நிமிடங்களில் ரோலக்ஸ் என்ற ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் சூர்யா. அந்த கேரக்டரில் சூர்யாவின் மிரட்டலால் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை அடுத்து அந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து சூர்யா நடிப்பில் ஒரு படம் இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்த நிலையில் நேற்று கங்குவா படத்தின் டிரைலர் விழாவில், நடிகர் வருண் தவான், ரோலக்ஸ் படம் குறித்து சூர்யாவிடத்தில் கேள்வி எழுப்பிய போது, அப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறிய சூர்யா, எனது அடுத்த படம் அதுவாகத்தான் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதனால் தற்போது ரஜினி நடிக்கும் 171-வது படத்தை இயக்க தயாராகி வரும் லோகேஷ் கனகராஜ், அந்த படத்தை முடித்ததும் சூர்யா நடிக்கும் ரோலக்ஸ் படத்தைதான் இயக்குவார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், 1700 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த ஒருவர் அப்போது செய்து முடிக்க முடியாமல் போன ஒரு காரியத்தை 500 ஆண்டுகள் கடந்து வந்து அதை முடிப்பதற்கு முயற்சிக்கும் கதையில் உருவாகியுள்ள சூர்யாவின் கங்குவா படத்தின் ஓடிடி உரிமையை 100 கோடிக்கு ஒரு நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.