ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் |

சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா படானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கங்குவா'. இப்படத்தின் டீசர் நேற்று மாலை யு டியூபில் வெளியிடப்பட்டது. 24 மணி நேரத்திற்கு முன்பாக 14.5 மில்லியன் பார்வைகளை இந்த டீசர் கடந்துள்ளது.
கடந்த வருடம் ஜுலை மாதம் வெளியிடப்பட்ட இப்படத்தின் அறிமுக டீசர் வீடியோ 24 மணி நேரத்தில் 22 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. நேற்று வெளியான டீசர் அந்த சாதனையைக் கடக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.
'கங்குவா' டீசரில் அதன் மேக்கிங்கும், சூர்யா, பாபி தியோர் ஆகியோரது தோற்றமும் ரசிகர்களால் பாராட்டைப் பெற்றுள்ளது. சரித்திரப் படங்களாக வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 1, 2' படங்களை விடவும் சரித்திரப் படமான 'கங்குவா' டீசர் இன்னும் எத்தனை பார்வைகளைக் கூடுதலாகப் பெறப் போகிறது என்பது படத்திற்குக் கிடைக்கும் வரவேற்புக்கும் ஒரு உதாரணமாய் அமையும்.




