அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு |
மௌன கீதங்கள், படிக்காதவன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஹீரோக்களின் சிறிய வயது வேடங்களிலும், மகன் வேடங்களிலும் நடித்து வந்தவர் மாஸ்டர் சுரேஷ். ஒரு கட்டத்தில் தெலுங்கில் சூரிய கிரண் என்ற பெயரில் படங்கள் இயக்கி வந்தார். அதோடு நடிகை காவேரியை திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் மஞ்சள் காமாலை நோய் காரணமாக மார்ச் 11ம் தேதி சூரிய கிரண் காலமானார். இந்த நிலையில் சீரியல் நடிகையும் அவரது தங்கையுமான சுஜிதா, அண்ணனின் மறைவு குறித்து சோசியல் மீடியாவில் ஒரு உருக்கமான பதிவு போட்டுள்ளார். அதில், ‛சூரிய கிரண் என்னுடைய சகோதரன் மட்டுமின்றி, தந்தையாகவும் ஹீரோவாகவும் இருந்தவர். அவரது திறமையை கண்டு நான் வியந்து இருக்கிறேன். மறுபிறவி என்ற ஒன்று இருந்தால் உனது கனவுகள் சாதனைகள் அனைத்தும் தொடரட்டும்' என்று குறிப்பிட்டுள்ள சுஜிதா, அண்ணன் சூரிய கிரணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.