ராஜமவுலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிருத்விராஜ் | பதட்டத்துடன் சிக்கந்தர் படப்பிடிப்பை நடத்திய ஏ.ஆர். முருகதாஸ் | ஆஸ்கர் விருதுக்காக நான்காவது குழந்தை பெற்றுக் கொள்ள தயார் : வீர தீர சூரன் நடிகர் புதிய லட்சியம் | என் சகோதரி நல்லா நடித்திருக்கிறாரா? - பிரித்விராஜிடம் விசாரித்த அமீர்கான் | இளையராஜாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க பரிசீலனை? | ஆன்லைன் முன்பதிவில் சாதனை படைத்த 'எல் 2 எம்புரான்' | அடுத்த மூன்று முக்கிய வெளியீடுகளில் இசை ஜிவி பிரகாஷ்குமார் | ‛வார் 2' படத்தால் ‛கூலி' படத்திற்கு அடித்த ஜாக்பாட் | சூர்யா 45 படத்தில் படமாக்கப்பட்ட பிரமாண்ட பாடல் காட்சி | சச்சின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தற்போது ஹரி இயக்கியுள்ள ரத்னம் படத்தில் நடித்திருக்கும் விஷால், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய 25 ஆண்டு கனவு இப்பொழுது தான் நனவாக போகிறது என்று தெரிவித்துள்ளார். அதோடு, ‛‛என்னுடைய தந்தையிடத்தில் நான் இயக்குனராக வேண்டும் என்று சொன்னபோது அவர் நடிகர் அர்ஜுனிடம் என்னை உதவி இயக்குனராக சேர்த்து விட்டார். பின்னர் அவர் விஷால் இப்போது நடிக்கட்டும். இயக்குனர் எப்போது வேண்டுமானால் ஆகிக்கொள்ளலாம் என்று சொன்னதை அடுத்து செல்லமே படத்தில் ஹீரோ ஆனேன்.
இந்த நிலையில்தான் தற்போது துப்பறிவாளன்- 2 படத்தின் மூலம் இயக்குனராகப் போகிறேன். அந்த வகையில் என்னுடைய 25 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது. துப்பறிவாளன்- 2 படப்பிடிப்புக்காக இன்று லண்டன் சென்று லொகேஷன் பார்க்கும் வேலையை முதற்கட்டமாக தொடங்கி, மே மாதம் முதல் படப்பிடிப்பு நடத்த உள்ளோம். ஒரு இயக்குனராக எனது கனவை முன்னெடுக்க உதவிய மிஷ்கினுக்கு நன்றி. ஒரு இயக்குனராக உங்கள் முன்பு பேசிக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நேரம் நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், ஒரு லட்சியம் ஒரு கனவு என்பதை அனைவரும் கண்டிப்பாக வைத்திருப்போம். அந்த கனவை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வந்தால் நிச்சயம் ஒரு நாள் நனவாகும் என்று தெரிவித்து இருக்கிறார் விஷால்.