அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
'மங்காத்தா' படம் மூலம் அஜித்துக்கு பெரும் திருப்புமுனையைத் தந்தவர் வெங்கட் பிரபு. தற்போது விஜய் நடிப்பில் 'தி கோட்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் அப்டேட் கேட்டு விஜய் ரசிகர்கள் வெங்கட் பிரபுவை அடிக்கடி தொந்தரவு செய்தும், வம்புக்கிழுத்தும் வருகிறார்கள். படக்குழுவினர் அடுத்த கட்டப் படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த இருக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று அஜித்தின் 63வது படமான 'குட் பேட் அக்லி' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சமூக வலைத்தளங்கள் முழுவதும் அப்படமே ஆக்கிரமித்திருந்தது. பதிலுக்கு விஜய் ரசிகர்களும் எதையாவது டிரெண்ட் செய்ய வேண்டும் எனக் காத்துள்ளார்கள். அவர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக 'மிக விரைவில்… 'கோட்', அது மதிப்பாக இருக்கும்,” என அப்டேட் கொடுத்துள்ளார்.