மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

ராஜமவுலி இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து 2022ம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. கடந்த வருடம் நடந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஒரிஜனல் பாடல் என்ற விருதை 'நாட்டு நாட்டு' பாடலுக்காக வென்றது. ஹாலிவுட் கலைஞர்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
இந்த ஆண்டிற்கான 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்தது. அதில் சினிமாவுக்காக உலகம் முழுவதும் ஸ்டன்ட் கோஆர்டினேட்டர்ஸ், ஸ்டன்ட் பர்பார்மெர்ஸ் ஆகியோருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் சில முக்கிய திரைப்படங்களின் ஸ்டன்ட் காட்சிகள் அடங்கிய வீடியோ மான்டேஜ் ஒன்றை வெளியிட்டார்கள். அதில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் சண்டைக் காட்சிகள் சில வினாடிகள் இடம் பெற்றன.
அந்த வீடியோவைப் பகிர்ந்து ஆர்ஆர்ஆர் குழு, “மீண்டும், எங்களுக்கு ஒரு இனிமையான ஆச்சரியம். சினிமாவில் உலகின் மிகச் சிறந்த ஸ்டன்ட் காட்சிகளுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் இடம் பெற்ற வீடியோவில் 'ஆர்ஆர்ஆர்' காட்சிகளும் இடம் பெற்றது மகிழ்ச்சி,” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.