Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்க வசூலில் முதல் சாதனை படைத்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்'

11 மார், 2024 - 11:33 IST
எழுத்தின் அளவு:
Manjummel-Boys-breaks-first-US-box-office-record

மலையாளத் திரைப்படம் ஒன்று தமிழகத்திலும், அமெரிக்காவிலும் புதிய சாதனையைப் படைத்து வருகிறது. சிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம்தான் அது என்பதை ரசிகர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

இதுவரையில் எந்த ஒரு மலையாளப் படத்திற்கும் ஓபனிங்கிலேயே இப்படி ஒரு வரவேற்பு தமிழகத்தில் கிடைத்ததில்லை என்று சொல்லுமளவிற்கு அப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அது போலவே அமெரிக்காவிலும் மலையாளத் திரையுலக வரலாற்றில் முதல் சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.

அங்கு ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெற்றுள்ளது. இத்தனை ஆண்டுகால மலையாள சினிமா வரலாற்றில் ஒரு மலையாளப் படம் 1 மில்லியன் டாலர் சாதனையைப் பெற்றுள்ளது சாதாரண விஷயமல்ல. மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது படங்கள் கூட அப்படிப்பட்ட சாதனையைப் புரியவில்லை. இளம் கலைஞர்கள் பங்கு பெற்ற ஒரு படம் புரிந்திருக்கிறது.

கடந்த வாரம் 100 கோடி வசூலைக் கடந்த இந்தப் படம் தற்போது 150 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆஸ்கர் விழாவில் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு மீண்டும் ஒரு அங்கீகாரம்ஆஸ்கர் விழாவில் 'ஆர்ஆர்ஆர்' ... மாற்றத்தை தந்த 'சிங்கப்பெண்ணே' : ஏஆர் ரஹ்மானுக்கு நன்றி சொன்ன கபடி கோச் கவிதா மாற்றத்தை தந்த 'சிங்கப்பெண்ணே' : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in