சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

நடிகர் விஜய் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் என பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியுள்ளார் . ஆனால், யுவன் சங்கர் ராஜா இசையில் இதுவரை விஜய் எந்த பாடலையும் பாடவில்லை. அதேபோல் யுவன் சங்கர் ராஜா விஜய் நடித்த 'புதிய கீதை' படத்திற்கு மட்டும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்' படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் படத்திற்கு இசையமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இதில் முதல் முறையாக யுவன் இசையில் விஜய் பாடல் ஒன்றை பாடியுள்ளதாக இன்று பெங்களூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் யுவன் சங்கர் ராஜா பகிர்ந்துள்ளார்.