இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
'எனக்கும் ஹீரோயினாக நடிக்க ஆசை தான். ஆனால் ரொமான்ஸ் செய்வது போல் காட்சிகளில் நடிக்க இஷ்டம் இல்லை,' என்கிறார் சென்னையை சேர்ந்த 24 வயதான வளர்ந்து வரும் நாயகி நிகிலா சங்கர்.
யூடியூப், வெப்சிரிசில் நடித்து தனித்திறமையால் பயணிகள் கவனிக்கவும், மாநாடு, கட்டாகுஸ்தி, குட்நைட், லவ்வர் போன்ற படங்களில் முக்கிய கதாபாரத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ள இவர் கூறியது:
2020 காலக்கட்டங்களில் நான் இஸ்ரேல் நாட்டில் இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்தேன். விடுமுறை காலங்களில் தான் வீட்டிற்கு வருவேன். அப்போது முதல் முறையாக யூடியூப் சேனலில் குறும்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வீட்டில் பெற்றோர்களிடம் இந்த ஒரு படம் மட்டும் தான் என்ற வார்த்தையை சொல்லி அனுமதி கேட்டு நடிக்க ஆரம்பித்தேன். அதன்பிறகு 'பிரக்னென்ட் புருஷன்'எனும் வெப்சீரிசில் நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படியே படிப்படியாக சினிமாவில் நடிக்க ஆசை ஏற்பட்டது. எனக்கு தெரிந்தவர்கள் மூலமாக வாய்ப்பு தேடி அலைந்தேன். இதற்கிடேயே படிப்பும் முடிந்தது.
அப்போது 6 வெப்சீரிஸ்கள் நடித்திருந்தேன். இப்படி குறும்படங்கள், வெப்சீரிஸ்களில் நடித்த எனக்கு முதல் முறையாக சிம்பு நடித்த மாநாடு படத்தில் பத்திரிகை நிருபர் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நல்ல முறையில் நடித்தேன். அதன்பின் கட்டாகுஸ்தி படத்தில் ஹீரோயினுக்கு தங்கை ரோலில் நடித்தேன். அது பொது மக்கள் என்னை அடையாளம் கண்டு பிடிக்க உதவியது. குட்நைட் படத்தில் ஹீரோவுக்கு தோழியாக நடித்தேன். தற்போது வெளியான லவ்வர் படத்திலும் நல்ல கேரக்டரில் நடித்துள்ளேன். அடுத்த கட்டமாக அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறேன்.
எனக்கும் ஹீரோயினாக நடிக்க ஆசை தான். வாய்ப்புகளும் வருகின்றன. ஆனால் எனக்கு ரொமான்ஸ் செய்வது போல் உள்ள காட்சிகளில் நடிக்க இஷ்டம் இல்லை. அந்த காட்சிகள் இல்லாமல் ஏதாவது படம் இருந்தால் அதில் எனக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் திறமையை நிரூபிப்பேன். நடிப்பு மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் வாய்ப்பு வந்துள்ளது. எனக்கு கணக்கு பாடம் படிப்பது பிடிக்கும் என்பதால் கிடைக்கும் நேரத்தில் யூடியூப்பில் தனியாக நான் தொடங்கியுள்ள சேனலில் 10, 11, 12ம் வகுப்பு கணக்கு பாடங்களை நடத்தி பதிவிடுகிறேன்.
பள்ளிப்படிப்பின் போது கர்நாடக சங்கீதமும் முறையாக கற்றிருப்பதால் பாடல்களும் பாடுவேன். தேன் சுடரே எனும் வெப்சீரிசை நானே இயக்கி நடிக்கிறேன். என்மீது ரசிகர்கள் பாசம் வைத்துள்ளார்கள். நடிப்பின் மூலமாக என் அப்பா, அம்மாவுக்கு நான் பெருமையை தேடி தந்திருக்கிறேன் என்றார்.