ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
நடிகை சாய் பல்லவி கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படம் மூலம் திரையுலகில் பிரபலமானார். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் 'களி' என்ற படத்தில் நடித்தார். பின்னர் 2018ல் தியா படம் மூலமாக தமிழில் அறிமுகமாகமானார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து 'மாரி 2', 'என்ஜிகே' போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவை கடந்து ஹிந்தி படங்களிலும் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
தற்போது ஹிந்தியில் நடிகர் அமீர் கானின் மூத்த மகன் ஜூனைத் கான் ஜோடியாக ‛ஏக் தின்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையைத் தொடர்ந்து ஜப்பானில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு இடையே ஜப்பானில் பல இடங்களை சுற்றிப்பார்த்த சாய்பல்லவி அதனை தனது எக்ஸ் பக்கத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்து வந்தார்.
கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து படக்குழுவினருக்கு 'பார்ட்டி' அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட சாய் பல்லவி, படக்குழுவினருடன் குத்தாட்டம் போட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.