ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'தண்டேல்'. இதில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்க, 'கார்த்திகேயா 2' புகழ் இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்க, அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரித்து வருகிறார். கடற்கரையோர கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நாகசைதன்யா மீனவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் நாகசைதன்யா எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்து விட அங்குள்ள ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
அங்கிருந்து எப்படி தப்பித்து மீண்டும் இந்தியாவுக்கு அவர் திரும்புகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என சொல்லப்படுகிறது. இதற்காக ஐதராபாத்தில் மிகப் பிரம்மாண்டமான அளவில் ஒரு பாகிஸ்தானிய சிறை செட் ஒன்று போடப்பட்டு வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட இருக்கின்றனவாம்.