இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டு திரைத் துறையினருக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இடையில் சில ஆண்டுகள் தடைபட்டு இருந்த நிலையில் மீண்டும் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2015 ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
36 வயதினிலே படம் மூலம் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்த ஜோதிகா படத்திற்கு சிறந்த நடிகை, சிறந்த படம் சிறப்பு பரிசு உட்பட 7 விருதுகள் கிடைத்துள்ளன. அதேப்போன்று ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன், சிறந்த படம் உட்பட 6 விருதும், மாதவன் நடித்த இறுதிச்சுற்று படம் சிறந்த நடிகர், இயக்குனர் உள்ளிட்ட 6 விருதுகளையும் வென்றுள்ளன.
விருதுகள் விபரம் வருமாறு...
* சிறந்த படம் :- தனி ஒருவன் (முதல் பரிசு)
* சிறந்த படம் : பசங்க 2 (இரண்டாம் பரிசு)
* சிறந்த படம் : பிரபா (மூன்றாம் பரிசு)
* சிறந்த படம் : இறுதிச்சுற்று (சிறப்பு பரிசு)
* பெண்கள் பற்றிய படம் : 36 வயதினிலே (சிறப்பு பரிசு)
* சிறந்த நடிகர் : மாதவன் (இறுதிச்சுற்று)
* சிறந்த நடிகை : ஜோதிகா (36 வயதினிலே)
* சிறந்த நடிகர் சிறப்பு பரிசு : கவுதம் கார்த்திக் (வை ராஜா வை)
* சிறந்த நடிகை சிறப்பு பரிசு : ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
* சிறந்த வில்லன் நடிகர் : அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
* சிறந்த காமெடி நடிகர் : சிங்கம் புலி (அஞ்சுக்கு ஒன்னு)
* சிறந்த காமெடி நடிகை : தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம், 36 வயதினிலே)
* சிறந்த குணச்சித்ர நடிகர் : தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்)
* சிறந்த குணச்சித்ர நடிகை : கவுதமி (பாபநாசம்)
* சிறந்த இயக்குனர் : சுதா கொங்கரா (இறுதிச்சுற்று)
* சிறந்த கதாசிரியர் : மோகன் ராஜா (தனி ஒருவன்)
* சிறந்த வசனம் : ரா.சரவணன் (கத்துக்குட்டி)
* சிறந்த இசையமைப்பாளர் : ஜிப்ரான் (உத்தம வில்லன், பாபநாசம்)
* சிறந்த பாடலாசிரியர் : விவேக் (36 வயதினிலே)
* சிறந்த பின்னணி பாடகர் : கானா பாலா (வை ராஜா வை)
* சிறந்த பின்னணி பாடகி : கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே)
* சிறந்த ஒளிப்பதிவாளர் : ராம்ஜி (தனி ஒருவன்)
* சிறந்த ஒலிப்பதிவாளர் : ஏஎல் துக்காராம், ஜே மகேஷ்வரன் (தாக்க தாக்க)
* சிறந்த எடிட்டர் : கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)
* சிறந்த கலை இயக்குனர் : பிரபாகரன் (பசங்க 2)
* சிறந்த ஸ்டன்ட் இயக்குனர் : ரமேஷ் (உத்தம வில்லன்)
* சிறந்த நடன இயக்குனர் : பிருந்தா (தனி ஒருவன்)
* சிறந்த ஒப்பனை கலைஞர் : சபரிகிரிஷன் (36 வயதினிலே, இறுதிச்சுற்று)
* சிறந்த ஆடை வடிவமைப்பு : வாசுகி பாஸ்கர் (மாயா)
* சிறந்த குழந்தை நட்சத்திரம் : மாஸ்டர் நிஷேஷ், பேபி வைஷ்ணவி (பசங்க 2)
* சிறந்த பின்னணி குரல் ஆண் : கவுதம் குமார் (36 வயதினிலே)
* சிறந்த பின்னணி குரல் பெண் : ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)
இந்த திரைப்பட விருதுகள் புதன்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், ராஜரத்தினம் கலையரங்கில் நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது. இதனை அமைச்சர்கள் சாமிநாதன், சேகர் பாபு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் வழங்குகிறார்கள். விருது பெறுபவர்களுக்கு தங்கப்பதக்கம், காசோலை மற்றும் நினைவுப்பரிசுடன் கூடிய சான்றுகள் வழங்கப்படுகின்றன.