சிறிய வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை: 'ஹாட்ரிக்' வெற்றியால் மணிகண்டன் நெகிழ்ச்சி | விவாகரத்து கோரி ஜிவி பிரகாஷ், சைந்தவி மனு தாக்கல் | சலார் சிறுவனை எம்புரானில் நடிக்க வைத்தது ஏன் ? பிரித்விராஜ் ருசிகர தகவல் | சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் ; வழக்கு விசாரணையை முடித்த சிபிஐ | ராபின் ஹுட் புரமோஷனுக்காக ஹைதராபாத் வந்த டேவிட் வார்னர் | ராஷ்மிகா மகளுடனும் ஜோடியாக நடிப்பேன் : சல்மான்கான் | எதுக்கு கடைசி நேர டென்ஷன் ? பிரித்விராஜ் நெத்தியடி கேள்வி | மலையாளப் படத்திற்கு முக்கியத்துவம் தரும் ரெட் ஜெயண்ட்? | பிரியதர்ஷினின் 100வது படத்தில் நடிப்பதை உறுதி செய்த மோகன்லால் | கும்பகோணம் கோவில்களில் சோபிதா துலிபலா சாமி தரிசனம் |
மலையாளத் திரையுலகின் மற்றுமொரு 'சென்சேஷனல்' படமாக 'மஞ்சம்மேல் பாய்ஸ்' படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. கேரளாவை தாண்டி அந்தப் படம் தமிழகம் உள்ளிட்ட இதர தென்னிந்திய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெளியான இப்படம் தமிழகத்தில் கடந்த வாரத்திலிருந்துதான் பரபரப்பை ஏற்படுத்தி அரங்கு நிறைந்த காட்சிகளாக பெரும்பாலான தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்தப் படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. படம் வெளியான 12 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
மலையாளத் திரையுலகில் இதற்கு முன்பு “புலி முருகன், லூசிபர், 2018” ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளன. நான்காவது படமாக 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் அந்த சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.10 கோடி வசூலைக் கடந்துள்ளது. இங்கு ஒரு மலையாளத் திரைப்படம் ரூ.10 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. தற்போது ஒரு நாளைக்கு 1200 காட்சிகள் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது..