எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' . இதுவரை உலகளவில் சுமார் ரூ. 70 கோடி வசூலைக் கடந்துள்ளது. பெரிதளவில் பிரபலமாகாத நடிகர், நடிகைகளை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் சிதம்பரம். இந்த படத்தில் குணா குகை முக்கிய பங்காற்றுகிறது. தமிழ் சினிமா ரசிகர்களிடமும் இந்த படம் வரவேற்பை பெற்றுள்ளது.
சில நாட்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன் இப்படக்குழுவினர்களை சந்தித்து பாராட்டினார். தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் இந்த பட இயக்குனர் சிதம்பரத்தை அழைத்து பாராட்டியுள்ளார். இதனை சிதம்பரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.