பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் |

பார்லிமென்ட் தேர்தல் நெருங்க உள்ள நேரத்தில் சினிமா துறையிலும் பல அரசியல் திருப்பங்கள் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. புதிதாக கட்சியில் சேர்வது, கட்சி மாறுவது என சில மாற்றங்கள் அந்த நேரங்களில் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான்.
முக்கிய சினிமா பிரபலங்கள் பலரைத் தங்கள் கட்சி பக்கம் சேர்க்க அனைத்து கட்சிகளுமே ஆர்வம் காட்டுவார்கள். அந்த விதத்தில் தெலுங்குத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான தில் ராஜு பாஜகவில் சேருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்து இங்கும் ரசிகர்களிடம் அறிமுகமானவர் தில் ராஜு. தெலங்கானா மாநில பாஜகவினர் தில் ராஜுவை சந்தித்து பேசியுள்ளார்கள். அவரைக் கட்சியில் சேர்க்கவும், நிஜாமாபாத் பார்லிமென்ட் தொகுதியில் அவரை நிறுத்தவும் பேச்சுவார்த்தை நடந்ததாகச் சொல்கிறார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு என்பதே அதற்குக் காரணம்.
கடந்த வருடம் நடந்து முடிந்த தெலங்கானா சட்டசபை தேர்தலில் நிஜமாபாத், அடிலாபாத் ஆகிய மாவட்டங்களில் பாஜகவிற்கு அங்கு குறிப்பிடத்தக்க ஓட்டுகள் கிடைத்து சில சட்டசபை தொகுதிகளையும் வென்றுள்ளது.
தில் ராஜு அரசியலில் இறங்குவாரா, தேர்தலில் போட்டியிடுவாரா என தெலங்கானா அரசியல் வட்டாரங்கள் மட்டுமல்ல, சினிமா வட்டாரங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.




