காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் |
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட படம் கல்கி 2898 ஏடி. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி என பான் இந்திய படமாக தயாராகி வருகிறது. சயின்ஸ் பிக்ஷன் கலந்த பேண்டஸி படமாக உருவாகிறது.
சமீபத்தில் நாக் அஸ்வின் அளித்த ஒரு பேட்டியில், ‛‛இந்த படத்தின் கதை மகாபாரத காலத்தில் தொடங்கி 2898ம் ஆண்டில் முடிகிறது. அதனால் தான் இந்த டைட்டில் வைத்துள்ளேன். அந்த வகையில் 6 ஆயிரம் ஆண்டுகள் நடக்கும் விஷயங்கள் எல்லாம் இந்த படத்தில் இடம் பெறுகிறது. குறிப்பாக எதிர்காலத்தில் இந்த உலகம் எப்படி இருக்க போகிறது என்பதை ஒரு கற்பனையில் உருவாக்கி இருக்கிறோம். அது ரொம்ப ஆச்சர்யமாகவும் பிரமிப்பாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படம் வரும் மே 9ம் தேதி வெளியாகிறது.