அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

நடிகர் கவுண்டமணி சிறிய இடைவெளிக்கு பின் நாயகனாக நடித்து வரும் படம் ‛ஒத்த ஓட்டு முத்தையா'. இதில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சாய்ராஜ் கோபால் இயக்குகிறார்.
மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடித்துள்ளனர். ஓட்டை மையமாக வைத்து காமெடி கதைக்களமாக இப்படத்தை உருவாக்கி வருகின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. சென்னையில் வைத்து மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக அறிவித்துள்ளனர். கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.