கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் | இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு |
திரையுலகில் வாரிசு நட்சத்திரங்களின் வரவு என்பது அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் இன்னொரு கிளையாக ஏற்கனவே சாதித்த நடிகர்களின் தம்பிகளும், அண்ணன்களைத் தொடர்ந்து சினிமாவில் சாதிப்பதற்காக களம் இறங்கி உள்ளார்கள். சமீபகாலமாக இது அதிகரித்துள்ளது. இதற்கு முன் இப்படி களம் இறங்கிய தம்பிகள் சாதித்தது என்ன? புதிதாக இறங்கப் போகும் தம்பிகள் சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பது பற்றிய ஒரு சின்ன அலசல் இது.
சூர்யா - கார்த்தி
இதற்கு மேற்கோள் காட்டும் உதாரணத்திற்காக மிக நீண்ட வருடங்களுக்கு முன்பு எல்லாம் செல்லத் தேவையில்லை. சூர்யா ஒரு வாரிசு நடிகராக அறிமுகமாகி தன்னை ஒரு நட்சத்திர நடிகராக நிலை நிறுத்திக் கொண்ட சமயத்தில் தான் அவரது தம்பி கார்த்தி சினிமாவில் அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். பராசக்தி என்கிற ஒரே படத்தின் மூலம் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு அப்படி ஒரே படத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் என்றால் அது நடிகர் கார்த்தி தான். அப்படி அந்த முதல் படத்தில் கிடைத்த வரவேற்பை, புகழை கடந்த 20 வருடங்களாக தக்க வைத்துக் கொண்டு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்...
விஜய் - விக்ராந்த்
நடிகர் விஜய்யின் சித்தி மகன் தான் என்றாலும் விஜய்க்கு தம்பியான விக்ராந்த் கதாநாயகனாக நடிக்க வந்து 15 வருடங்களுக்கு மேல் ஓடி விட்டது. ஒரு சில படங்களில் மட்டும் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த விக்ராந்த் இத்தனை வருடங்களில் சொல்லிக் கொள்ளும்படியான தனிப்பட்ட வெற்றியென எதையும் பெறாமல் போராடி வருகிறார். சமீபத்தில் வெளியான லால் சலாம் படம் கூட விக்ராந்திற்கு கை கொடுக்கவில்லை.
ஆர்யா - சத்யா
கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா புத்தகம் என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அறிமுகப்படம் மட்டுமல்ல, அதன் பிறகு நடித்த சில படங்களும் அவருக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை.
அல்லு அர்ஜூன் - அல்லு சிரிஷ்
இதேபோல தெலுங்கில் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் கதாநாயகனாக களம் இறங்கினாலும் இன்னும் அவருக்கான வெற்றிப் படம் என எதுவும் அமையாமல் போராடி வருகிறார். அதேபோலத்தான் மலையாளத்தில் நடிகர் பஹத் பாசிலின் தம்பி 2014லிலேயே கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு இன்னும் மூன்று படங்களில் நடித்தவர் பெரிய அளவில் வாய்ப்பு இன்றி தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.
வினீத் - தயன்
இன்னொரு பக்கம் மலையாளத்தில் இயக்குனரும் நடிகருமான வினீத் சீனிவாசன் வாரிசு நடிகராக அல்லாமல் ஒரு இயக்குனராக களம் இறங்கி தனது திறமையை நிரூபித்து இப்போதுவரை வெற்றிகரமாந இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். அவருக்கு பிறகு சில வருடங்கள் கழித்து அவரது தம்பி தயன் சீனிவாசன், தந்தை, அண்ணன் நட்சத்திர பின்னணியுடன் சினிமாவில் நடிகராக இறங்கினார். ஆரம்பத்தில் அவரது நடிப்பு விமர்சிக்கப்பட்டாலும் ஒரு கட்டத்தில் காமெடி கலந்த பாதையை கையில் எடுத்து சில படங்களில் கதாநாயகனாக நடித்து அவற்றின் மூலம் ஓரிரு வெற்றிகளையும் பெற்றார். தன்னை ஒரு இயக்குனராகவும் மாற்றிக்கொண்டு நயன்தாராவை வைத்து லவ் ஆக்சன் டிராமா என்கிற ஒரு படத்தை இயக்கும் அளவிற்கு குறிப்பிட்ட உயரத்தையும் தொட்டார். தற்போது வரை சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் தேவரகொண்டா - ஆனந்த் தேவரகொண்டா
அதேபோல தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா கடந்த சில வருடங்களுக்கு முன் கதாநாயகனாக அறிமுகமானார். ஒரு சில படங்கள் கை கொடுக்காத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான பேபி திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனை வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து அவர் எந்தவிதமான படங்களை தேர்ந்தெடுக்கிறார் என்பதை பொறுத்து தான் அவரது வெற்றி பயணம் தொடரும்.
ராகவா லாரன்ஸ் - எல்வின்
தமிழில் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் தனது அண்ணனின் ஒரு சில படங்களில் நடனமாடியவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஏதோ சில காரணங்களால் அப்படியே கைவிடப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் எல்வின் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் புல்லட் என்கிற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸும் சிறப்பு தோற்றத்தில் தம்பிக்காக நடிக்கிறார்.
அதர்வா - ஆகாஷ்
நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷும் தற்போது கதாநாயகனாக களம் இறங்கி உள்ளார். அவரது மாமனாரும் பிரபல தயாரிப்பாளருமான பிரிட்டோ சேவியர் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஆகாஷ்
விஷ்ணு விஷால் - ருத்ரா
இந்த பட்டியலில் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ராவும் தற்போது தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் இயக்கும் ஓஹோ எந்தன் பேபி என்கிற படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.
ராகவா லாரன்ஸ், அதர்வா, விஷ்ணு விஷால் என ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களாக குறிப்பிடத்தக்க வெற்றி படங்களை கொடுத்த நடிகர்களான இவர்களது தம்பிகள் அண்ணன்களை போலவே சாதிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.