மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” |
369 சினிமா என்ற நிறுவனம் தயாரித்துள்ள படம் 'நாதமுனி'. மாதவன் லக்ஷ்மன் இயக்கத்தில் இந்திரஜித், ஐஸ்வர்யா தத்தா, அந்தோணிதாசன், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். சுகுமாறன் ஒளிப்பதிவு செய்துள்ளார், இளையராஜா இசை அமைத்துள்ளார்.
இதில் ஐஸ்வர்யா தத்தா 10 வயது சிறுமிக்கு தாயாக நடித்துள்ளார். 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா அதன் பிறகு பாயும்புலி, அச்சாரம், சத்ரியன், காபி வித் காதல், இரும்பன், கன்னித்தீவு, பர்ஹானா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். முதன் முறையாக இந்த படத்தில் 10 வயது சிறுமிக்கு தாயாகவும், கிராமத்து பெண்ணாகவும் நடிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் மாதவன் லக்ஷ்மன் கூறும்போது, “சாமானிய மனிதர்களின் அறமும், சீற்றமும் சகமனிதர்களின் செயல்களால் எவ்வாறு வாழ்வில் வினைபுரிகிறது என்பதை கருத்தாளமிக்க கதையாக உருவாகியிருக்கும் படம் தான் 'நாதமுனி'. சாமானிய தகப்பனாக இந்திரஜித் இந்த படத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். ஏழைத்தாயாக இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா வாழ்ந்திருக்கிறார். பாடகர் அந்தோணிதாசன் மற்றும் ஜான் விஜய் மற்றும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் கதை சொன்னதுடன் கதையை பாராட்டி இசை அமைக்க ஒப்புக் கொண்டார். படத்திற்கு முத்தான பாடல்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார். கங்கை அமரன் இந்த படத்தில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்” என்றார்.