25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
'சார் சார் ரம்பா சார்' என 90களில் தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ரசிகர்களையும் தனதாக்கிக் கொண்டவர் ரம்பா. “உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், அருணாச்சலம், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, ஆனந்தம்,” என சில படங்கள் அவரை இப்போதும் ஞாபகப்படுத்தும். தமிழில் பத்து ஆண்டுகள் பரபரப்பாக நடித்தவர் அதன்பின் திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலாகிவிட்டார்.
அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்களைப் பகிர்ந்து ஏதாவது பதிவிடுவார். நேற்று இரவு தனது மகளுடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து 'என் தேவதை' எனக் குறிப்பிட்டுள்ளார். அம்மாவை விடவும் அழகாக இருக்கிறார் அவரது மகள்.
90களில் டாப் ஸ்டார்களாக இருந்தவர்களின் மகள்கள், மகன்கள் இப்போது டீன் ஏஜ் கால கட்டத்தில் இருப்பார்கள். அவர்கள் அடுத்தடுத்து நடிக்க வரலாம். மற்ற சினிமா வாரிசுகளைப் போல, விரைவில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வருவாரா ரம்பாவின் மகள் என்ற கேள்வி படத்தைப் பார்த்ததும் வருகிறது.