ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

சினிமாவில் ஜெயிக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர் விக்னேஷ். விக்ரமிற்கு பெரிய திருப்பம் ஏற்படுத்தி கொடுத்த 'சேது' படத்தில் முதலில் நடிக்க தேர்வானர்தான் விக்னேஷ். அன்றைக்கிருந்த சூழ்நிலையில் அது நடக்கவில்லை. இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் விக்னேஷ் நடித்து விட்டார். ‛‛கிழக்கு சீமையிலே, உழவன், ராமன் அப்துல்லா, கண்ணெதிரே தோன்றினாள், பசும்பொன்...'' போன்றவை அதில் முக்கியமானவை. கடைசியாக 'சந்திரமுகி 2' படத்தில் நடித்தார். ஆனாலும் விக்னேஷால் ஒரு ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் 'ரெட் பிளவர்' என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். இதனை ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ஆண்ட்ரீவ் பாண்டியன் இயக்குகிறார். நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், கோபி கண்ணதாசன், மனோகரன், லீலா சாம்சன், அபிஷேக் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் இசை அமைக்கிறார். அரவிந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.