ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் வாணி போஜன். ஓ மை கடவுளே, லாக்அப், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் ராக்கர்ஸ், செங்களம் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது ஆர்யன், கேசினோ, பகைவனுக்கு அருள்வாய் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்யை வரவேற்ற வாணி போஜன், அவருக்கு தமிழக மக்கள் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது “நான் செங்களம் என்ற தொடரில் நடித்தபோது எனக்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போதும் அரசியலுக்கு வர ஆசை இருக்கிறது. தனி கட்சி தொடங்கி உள்ள விஜய்க்கு அரசியலில் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அப்போதுதான் அவர் மக்களுக்காக என்ன செய்கிறார், அவருடைய நோக்கம் என்ன என்பது பற்றி நமக்கும் தெரியவரும். அவர் என்ன செய்வார் என்பதை பார்க்கலாம். அரசியலில் இவர்கள்தான் வரவேண்டும் என்று இல்லை. நல்லது செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்'' என்றார்.