சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
சமீபத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் புளூ ஸ்டார் திரைப்படம் வெளியானது. உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையேயான போட்டியை மையமாக வைத்து வெளியான இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியிருந்தார். படமும் ஓரளவுக்கு வரவேற்பையும், வெற்றியையும் பெற்றுள்ளது. ஆனால் இந்த படத்திற்காக முதலில் கதாநாயகனாக ஜெயக்குமார் அணுகியது நடிகர் கவினைத்தான். ஆனால் கவின் அப்போது வேறு சில படங்களுக்கு தேதியை ஒதுக்கி இருந்ததால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.
அதன்பிறகு தான் இந்த படம் அசோக் செல்வனிடம் சென்றது. அந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி பாண்டியன் ஒப்பந்தமாகி இருந்தார். ஏற்கனவே கீர்த்தி பாண்டியனுடன் நெருங்கிய நட்பில் இருந்த அசோக் செல்வன் உடனடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் தனது காதலையும் கீர்த்தி பாண்டியனிடம் தெரிவித்தார். இந்த படம் வெளி வருவதற்குள் அவர்கள் காதலும் திருமணத்தில் கை கூடியது.