இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இயக்குனர் சீனு ராமசாமி தனது படங்களை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு சென்று அதனை கவனம் பெற வைப்பதில் கில்லாடி. விஜய்சேதுபதி நடிப்பில் அவர் இயக்கிய 'மாமனிதன்' படத்தை உலகம் முழுக்க கொண்டு சென்று விருதுகளை பெற்றுக் கொடுத்தார். அந்த வகையில் உதயநிதி நடித்த 'கண்ணே கலைமானே' படத்தை கொண்டு சென்று வருகிறார்.
பிரான்சில் நடந்த 2023ம் ஆண்டுக்கான இந்திய, பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதிக்கும், சிறந்த நடிகை விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகை விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்தது. மேலும், சிறந்த திரைப்படத்திற்காக அமெரிக்க சோகால் விருதையும் வென்றது.
இதனையடுத்து, தற்போது ஜெய்பூரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. பியூச்சர் பிக்ஷன் பிரிவில் இந்தப் படத்திற்கு கவுரவ விருது வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பல சர்வதேச பட விழாவுக்கு கண்ணே கலைமானே படத்தை கொண்டு செல்ல சீனு ராமசாமி முடிவு செய்திருக்கிறார்.