நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதியர் தர்மேந்திரா - ஹேமமாலினி. இவர்களுக்கு இஷா, அஹானா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் இஷா ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த், நடித்த ‛ஆய்த எழுத்து' படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தார்.
பரத் தக்னானி என்பவரை காதலித்து வந்த இஷா 2012ல் அவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த பல மாதங்களாகவே கருத்து வேறுபாட்டால் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், ‛‛நாங்கள் பரஸ்பரமாக பிரிய முடிவு செய்துள்ளோம். எங்கள் குழந்தைகளுக்கு என்றும் முக்கியத்துவம் தருவோம்'' என குறிப்பிட்டுள்ளனர்.