ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‛கோட்' படத்தில் நடித்து வரும் விஜய், அரசியல் கட்சியை அறிவித்து விட்டதால் 69வது படத்தோடு தனது திரை வாழ்க்கையை முடித்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் விஜய்யின் கடைசி படத்தை இயக்குவது யார் என்ற ஒரு செய்தி கோலிவுட்டில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
அந்த பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், அட்லி, எச்.வினோத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே விஜய்யின் அடுத்த படத்தை இயக்க கார்த்திக் சுப்புராஜ் அவரிடத்தில் கதை சொல்லி இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் அட்லியும் விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொல்லி இருக்கிறார். ஆனால் இவர்கள் இருவருக்கும் முன்பே எச்.வினோத் விஜய்யை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறாராம். அது அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்றும் கூறப்படுகிறது. அதனால் இந்த மூன்று பேர்களில் எச்.வினோத் கூறிய அரசியல் கதையிலேயே விஜய் அடுத்த படியாக நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.