'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். கமல் தயாரிக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. நாயகியாக தீபிகா படுகோனே அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என கூறப்படுகிறது. வரலாற்று படமாக ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இதற்காக சிம்பு நீண்ட தலைமுடியை வளர்த்துள்ளார். அதோடு பல தற்காப்பு கலைகளையும் கற்று வருகிறார்.
நாளை(பிப்., 3) சிம்புவின் பிறந்தநாள். இதையொட்டி இன்று இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் இரண்டு சிம்பு நேருக்கு நேர் மோதுவது போன்றும், பின்னணியில் போர்கள காட்சிகள் மாதிரியான தோற்றமும் உள்ளது. இதை வைத்து பார்க்கையில் இந்த படத்தில் சிம்பு இரண்டு வேடங்களில் நடிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. படத்தை தலைப்பை வெளியிடவில்லை. மாறாக அதில் ‛STR 48' என வாள் வடிவில் வெளியிட்டுள்ளனர்.