ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
நடிகர் ஜீவா தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் கூட நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் உருவாகி உள்ள யாத்ரா 2 என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஏற்கனவே யாத்ரா என்கிற திரைப்படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியானது .
ராஜசேகர் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். தற்போது அந்த படத்தில் இரண்டாம் பாகமாக யாத்ரா 2 உருவாகியுள்ளது. இந்த படத்திலும் மம்முட்டி நடித்திருக்கிறார் என்றாலும் இந்த படம் ராஜசேகர் ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பயணத்தை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இதில் ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் தான் ஜீவா நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 8ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட ஜீவா, “மம்முட்டி போன்ற ஜாம்பவானுடன் இணைந்து பணிபுரிந்தது புதிய அனுபவமாக இருந்தது. அரசியல் படத்தில் நடித்தால் ஒரு நடிகருக்கு அது ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா என்கிற குழப்பம் எனக்கு இருந்தது. இதை படப்பிடிப்பின்போது மம்முட்டியிடமே கேட்டபோது, ஒரு பிரச்சனையும் வராது.. நாமெல்லாம் நடிகர்கள்.. கொடுக்கின்ற கதாபாத்திரத்தை நடித்துவிட்டு செல்கிறோம். அவ்வளவுதான்.. என்று கூறி எனது குழப்பத்தை போக்கினார். அவருடன் நடித்த ஒவ்வொரு நாளும் பல புதிய விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார் ஜீவா.