''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அதன்பிறகு பான் இந்தியா ரிலீஸ் என்கிற வார்த்தை ரொம்பவே பிரபலமானது. தொடர்ந்து பெரிய நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்டை குறிவைத்து பான் இந்திய ரிலீசாக வெளியாகி வருகின்றன. அது மட்டுமல்ல பல ஹீரோக்களும், ஹீரோயின்களும் தங்களை பான் இந்திய நட்சத்திரங்களாக உருமாற்றிக் கொண்டும் வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் நடிகைகள் இப்படி பான் இந்திய அங்கீகாரம் பெற்று வருவது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், “கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பே அதாவது நான் அறிமுகமாகி வளர்ந்து வந்த காலகட்டத்திலேயே, குறிப்பாக இந்த சோசியல் மீடியா மற்றும் ஓடிடி தளங்கள் வருவதற்கு முன்பே தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்டிலும் நுழைந்து நடித்து விட்டேன். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய அப்போதைய பேட்டிகளை கவனித்துப் பார்த்தால் பான் இந்தியா என்கிற வார்த்தையை நான் பயன்படுத்தி இருப்பதை பார்க்கலாம். அதனால் மற்ற நடிகைகளுடன் என்னை ஒப்பிட்டு பேச வேண்டாம்” என்று கூறியுள்ளார்.