பிளாஷ்பேக் : சோலோ ஹீரோயினாக நடித்த வி.என்.ஜானகி | பிறந்தநாளில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | ஒரு படம் வருவதற்கு முன்பே பிஸியாகும் சாய் அபயங்கர் | வீர தீர சூரன் படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை : தொடர் பேச்சுவார்த்தை.... 6 மணி காட்சி வெளியாக வாய்ப்பு | விட்டுக் கொடுத்த விக்ரம் : வெளியாகும் 'வீர தீர சூரன் 2' | எம்புரானை தெலுங்கில் ரீமேக் செய்ய முடியாது : மோகன்லால் ஓபன் டாக் | கார் விபத்தில் சிக்கி நடிகர் சோனு சூட் மனைவி காயம் | இசையமைப்பாளர் ஷான் ரகுமான் மீது பண மோசடி வழக்கு | டேவிட் வார்னர் பற்றி அலட்சியமாக பேசவில்லை : வருத்தம் தெரிவித்த நடிகர் ராஜேந்திர பிரசாத் | யாருப்பா அந்த வில்லன் |
நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தபு உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்துடன் தபு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்கிற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க எஸ்.ஜே. சூர்யா மற்றும் அரவிந்த்சாமி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.